மதுரை : ''ஜல்லிக்கடடு குறித்து பார்லிமென்ட்டில் பேசாமல் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே போனார்கள்?'' என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: 'ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ., அரசு மேற்கொண்டு வருகிறது. சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சிலர், 'மத்திய அரசு ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது?' என பேசுகின்றனர்.
கடந்த மாதம் பார்லிமென்ட் கூட்டம் நடந்த போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் எங்கே சென்றனர்; கடைசி 10 நாட்கள் ஏன் வரவில்லை; எது அவர்களை தடுத்தது. மற்ற கட்சி உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்; தற்போது ஞானோதயம் பெற்றதற்கு என்ன காரணம்? தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்., கட்சிகளை துடைத்தெறிந்து விட்டு, மக்கள் பொங்கல் கொண்டாடினால், 50 ஆண்டுகள் அவலநிலை மாறி ஒரு நல்ல நிலை தமிழகத்திற்கு பிறக்கும். ஜல்லிக்கட்டு கட்டாயமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Madurai : '' jallikkatatu silent about the AIADMK in Parliament, MPs, where did it go? '' The Federal Minister for gold. Radhakrishnan asked.