சென்னை : வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள், எஃகுக் கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா? என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மடல்:
இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா, தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:-
அ.தி.மு.க என்ற இந்த மாபெரும் இயக்கத்தை மக்கள் சக்தியின் துணை கொண்டு மகத்தான கோபுரமாய் கட்டி எழுப்பிய, ஈரமும், வீரமும் நிறைந்த ஈகைக் குன்றாம், கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி உங்கள் அனைவரையும் இம்மடல் வழியாகச் சந்திப்பதில் உள்ளம் நெகிழ்கிறேன்.
ஆழமாய் வேர் விட்டு, அகலமாய் கிளை பரப்பி, ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மண்ணில் நிலைத்து நின்று நிழல் தரும் ஆல விருட்சமாக அ.தி.மு.க எனும் இயக்கத்தை மக்கள் சக்தி கொண்டு தொடங்கினார் நம் எம்.ஜி.ஆர். ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம் என்னும் காஞ்சித் தலைவனின் சங்க நாதத்தை தம் அரசியல் வாழ்வின் ஆதார நோக்கமாகக் கொண்டு அதனையே இந்த இயக்கத்தின் வேதமாக, கொள்கையாக மாற்றி, இம்மண்ணில் தன் இறுதி மூச்சு வரை ஏழைப் பங்காளனாகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.
வாகைக்கு இலக்கணம் ஜெயலலிதா:
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுவது என்ற லட்சியத்தை திரையுலகைத் தாண்டி பொது வாழ்விலும், அரசியல் களத்திலும் சாதித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர். அவர் கண்டெடுத்த ஈடு இணையற்ற தலைவியாம், ஜெயலலிதா அ.தி.மு.கவை வெற்றிகளின் உச்சத்தில் தூக்கி நிறுத்தினார். நம் உள்ளங்களிலும், உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் 'அம்மா' என்கிற அடையாளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா. தனது மகத்தான ஆளுமைத் திறனால், அளப்பரிய மக்கள் செல்வாக்கால், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையோடும், அடுத்தடுத்து ஆளுங்கட்சி என்கிற மகோன்னதப் பெருமையை 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் படைத்து, அதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் வெற்றிகளின் மூலம் வாகைக்கே இலக்கணம் வகுத்துவிட்டு, கம்பீரமாய் நம்மையும், கழகத்தையும் விண் முட்டும் உயரத்தில் நிறுத்திவிட்டு, திராவிட அரசியலின் தேவதையாம் நம் அம்மா தெய்வத் திருவடிகளை அடைந்துவிட்டார்.
ஜெயலலிதா இருந்த நொடி வரை அரசியல் களத்தில் நம்மை எதிர்கொள்ள முடியாமல் நமது அரசியல் எதிரிகள் துவண்டு கிடந்தார்கள். தமிழக மக்களிடம் அசைக்க முடியாத மக்கள் சக்தியாக எழுந்து நின்ற ஜெயலலிதாவின் வீறு நடை, இந்த இயக்கம் எம்.ஜி.ஆரால் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதில் குன்றிமணி அளவிலும் குறைவில்லாது கொள்கையில் செழித்தோங்க, தமிழக அரசியல் களத்தில் தீய சக்திகள் தலையெடுக்க முடியாதபடி நம் வெற்றித் திருமகளின் விவேகப் பொது வாழ்க்கை அவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் துடைத்தெறிந்தது. ``மக்களால் நான், மக்களுக்காகவே நான்'' என்பதைத் தன் வாழ்க்கையின் பிரகடனமாக மட்டும் ஜெயலலிதா அறிவிக்கவில்லை. தனது தலைமையில் அரசு அமைந்த போதெல்லாம் அதைச் செயலிலும் நிலைநாட்டிக் காட்டினார். அகண்ட இந்தப் பாரத தேசத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கணக்கற்ற மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். ஒவ்வொரு வீடும் அவரால் ஒளி கொண்டது.
நெருக்கடியும் எதிரிகளும்:
உலக அரங்கில் தமிழர் மானம் தலை நிமிர்ந்தது. பெண் இனத்தின் வாழ்வு பொலிவடைந்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் பாரதத்திற்கே வழிகாட்டும் புரட்சிகளின் மண்ணாய் தாயின் தன்னிகரில்லா ஆட்சியில் தமிழகம் தழைத்தோங்கியது.புகழின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் போதே நம் அம்மாவை இயற்கை நம்மிடமிருந்து பிரித்து தனதாக்கிக் கொண்டது. ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை எவராலும் இனி நிரப்ப முடியாது என்றாலும், இந்த இயக்கத்தின் வேர்களாகவும், விழுதுகளாகவும் இருக்கிற கோடிக்கணக்கான தொண்டர்களின் முன்னால் இப்போது மிகப் பெரும் கடமை காத்திருக்கிறது. அது, ஜெயலலிதாவின் திடீர் மறைவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிரிகள் பயன்படுத்திக்கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதித்துவிடக் கூடாது என்பது தான்.
ஜெயலலிதா நமக்கு கற்றுக் கொடுத்த அரசியல் பாடங்களாகிய, இந்தியாவின் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் இல்லாத ராணுவக் கட்டுப்பாடும், தலைமையின் மீது மாறாப் பற்றும், தீராத விசுவாசமும் கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திற்கும் கிடைக்காத பேறு.உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும். வாழ்வின் உச்ச நிலையைக் கடைக்கோடித் தொண்டரும் அடைய முடியும் என்பதை முதல்வர் ஜெயலலிதா.இந்த இயக்கத்தின் வாயிலாகப் பல முறை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது நமது இயக்கத்தில் மட்டுமே சாத்தியமானது. எத்தனையோ நெருக்கடிகளையும் தாண்டி இறுதிவரை சிறுபான்மையினரின் நலனை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அ.தி.மு.கவை வழிநடத்திச் சென்றவர்ஜெயலலிதா
சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரை:
அ.தி.மு.க என்ற இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தின் தேவையும், சேவையும் தனக்குப் பின்னாலும் தொடர வேண்டும் என்று சட்டமன்றத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டார்ஜெயலலிதா. ``அ.தி.மு.க என்ற இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது'' என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தார் ஜெயலலிதாஅந்த சூளுரையை நிரூபித்துக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதாவின் நலன் ஒன்றையே எனது நலனாக, அவரின் விருப்பங்களையே எனது விருப்பமாக, அவரின் லட்சியங்களுக்கு உடன் நிற்கும் துணையாக இதுவரையிலான என் வாழ்வு அமைந்துவிட்டது. இந்த 33 ஆண்டு பயணத்தின் பொழுதுகளை நினைத்துப் பார்த்துக்கொண்டே எனது எஞ்சிய வாழ்நாளைக் கழித்துவிடலாம் என்றாலும், இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இந்த இயக்கம் சிறிதளவும் கீழிறங்கிவிடக் கூடாது என்கிற என் உள்ளார்ந்த அக்கறையாலும், என் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் அன்புக் கட்டளையாலுமே இந்த பொது வாழ்வு என்ற வேள்வியில் என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள உடன்பட்டேன்.
எஃகு கோட்டையில் விரிசல் விடாது:
ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு நீங்கள் கழகத்தில் தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம். நம் கண் முன்னால் ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க எனும் ஒப்பற்ற இந்த இயக்கத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்.வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள், எஃகுக் கோட்டையில் விரிசல் விடாதா ? தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா ? என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்தவேளையில்,முன்பைவிட உறுதியாய், அன்பென்பதில் அடர்த்தியாய்,கழகத்தையும், தமிழகத்தையும்,கண்களெனக் காத்திடஎம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதாவின் திருநாமத்தின் பேரால் சூளுரை ஏற்போம். அ.தி.மு.க நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. ஜெயலலிதாவின் அந்தக் கனவை நிறைவேற்றும் வண்ணம், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழகத்தின் சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மடலில் அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: fallen kit for our enemies, cracking steel castle? Would stem grown stick to? AIADMK general secretary Shashikala would have thought that this allegation.