புதுடில்லி: நாடு முழுவதும், ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில், 2,400 ஏ.டிஎம்.,களை நிறுவ, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இலக்கு:
ரயில் கட்டணம் தவிர, விளம்பரம் உள்ளிட்ட மற்ற வழிகளில், வருவாயை பெருக்குவது தொடர்பாக, ரயில்வே துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம், 2,000 கோடி ரூபாய் வரை, நிதி திரட்ட ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில், ஏ.டி.எம்.,களை நிறுவ, வங்கிகளுக்கு இடமளிக்கும் திட்டமும் உள்ளது.
விளம்பர வசதி:
இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:ரயில்வே துறையின் மொத்த வருவாயில், 5 சதவீதம் மட்டுமே, தற்போது, விளம்பரங்கள் மூலம் திரட்டப்படுகிறது; இதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை, பாலங்கள் உள்ளிட்ட இடங்களில், விளம்பரங்களுக்கு இடமளிக்கப்படும். குறிப்பாக, எல்.இ.டி., திரை மூலம், விளம்பரங்கள் செய்ய வசதி செய்யப்படும். ரயில் பெட்டிகளிலும் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கப்படும்.
ஏ.டி.எம்.,கள்:
நாடு முழுவதும், ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில், 2,400 ஏ.டி.எம்.,களை நிறுவுவதற்கு, வங்கிகளுக்கு இடம் வழங்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
English summary:
NEW DELHI : The country railway station platforms, at 2,400 ATM, Installed on Railways has decided.