'புதுடில்லி:'ஆதார் கார்டுக்கு தேவையான, விரல் ரேகை பதிவு மற்றும் கண் கருவிழி பதிவு போன்ற விபரங்களை, தனியார் அமைப்புகள் மூலம் சேகரிப்பதுசரியான நடவடிக்கை அல்ல' என, சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக, ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது;இதை பெற, பொதுமக்களிடம் கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவு செய்யப்படுகிறது; தவிர, அவர்களின் முகவரி, பிறந்த தினம்உள்ளிட்ட விபரங்களும் பெறப்படுகின்றன.
இந்த விபரங்கள், ஒப்பந்தஅடிப்படையில் தனியார் அமைப்புகள் மூலம்சேகரிக்கப்படுகின்றன. இது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் படி, தனிப்பட்ட உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், என்.வி.ரமணா மற்றும் டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. எனினும், ஆதார் கார்டுக்காக, பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பை, தனியார்அமைப்புகள் மூலம் சேகரிப்பது சரியான நடவடிக்கை அல்ல. இவ்வாறு அந்த அமர்வு உத்தரவிட்டது.
English summary:
'NEW DELHI: Aadhaar card is required for the registration of fingerprints and iris of the eye, such as registration details, deposit action by private organizations and not, as suggested by the Supreme Court.