புதுடில்லி : கிராமப்புறவாசிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முக்கியத் திட்டமான 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்டத்திற்கு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை விரைந்து வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர் மானியம், முதியோர் பென்சன் உள்பட பல திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary:
NEW DELHI: provide employment for the rural folk Employment Guarantee Scheme key proposal of 100 days from the month of April, the government announced that the Aadhaar number mandatory.