புதுடில்லி: மேகாலயா மாநில கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக, சண்முகநாதன் அளித்த கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்றார்.
ராஜினாமா ஏற்பு:
தமிழகத்தைச் சேர்ந்த, சண்முகநாதன், மேகாலயா, அருணாச்சல பிரதேச மாநிலங்களின் கவர்னராக பதவி வகித்து வந்தார். அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். சண்முகநாதனின் ராஜினாமாவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்றதாக, ஜனாதிபதி மாளிகை செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூடுதல் பொறுப்பு:
சண்முகநாதன் ராஜினாமாவை அடுத்து, அசாம் மாநில கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மேகாலயா மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். நாகலாந்து மாநில கவர்னர், பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா, அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். 'மேகாலயா, அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு, பிரத்யேக கவர்னர்கள் நியமிக்கப்படும் வரை, இவர்கள், இப்பதவியில் நீடிப்பர்' என, ஜனாதிபதி மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
NEW DELHI: resignation from the post of governor of the state of Meghalaya, Shanmughanathan the letter, President Pranab Mukherjee accepted.