புதுடில்லி : பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். அவருக்கு பதில் அத்வானியோ அல்லது அருண் ஜெட்லியோ அல்லது ராஜ்நாத் சிங்கோ பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி உதவி செய்ய வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மோடி மீது தாக்கு :
ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும். மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். மோடி பதவி விலக வேண்டும். திட்ட கமிஷன் போன்ற பல காலமாக இருந்த அமைப்புக்களை கலைத்த இது போன்றதொரு பழிவாங்கும் அரசை நான் பார்த்ததில்லை.
அத்வானிக்கு ஆதரவு :
இப்போதுள்ள சூழ்நிலையில் வேறொரு பா.ஜ., தலைவர் தலைமையில் தேசிய அரசு அமைக்கப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். அத்வானி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி போன்ற யாராவது ஒருவர் தலைமை தாங்கட்டும்.அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசு அமைப்பது குறித்த கருத்தை வலியுறுத்த வேண்டும். நமது அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைப்போம். குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி தேசிய அரசை அமைப்போம். மத்தியில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சரியான நேரம் இது தான். குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
English summary:
New Delhi: Prime Minister Narendra Modi should resign. Or Advani, Rajnath Singh, Arun jetliyo answer him or to accept the prime ministership. West Bengal Chief Minister Mamata Banerjee said that the president can do to help.