அரியலூர்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி போட்டி நடத்தக்கோரி அரியலூர் மாவட்டத்தில் 5 வது நாளாக மாணவர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல், அமைதி ஊர்வலம், கடையடைப்பு என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை உள்ளிட்ட தமிழர் கலாசார நிகழ்வுகள் தடையின்றி நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு காளையை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும், விலங்குகள் நல வாரியம், அமெரிக்க நிறுவனமான பீட்டா உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து வரலாறு காணாத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தடை நீக்கம் குறித்த அறிவிப்பு வரவில்லை. இதனால் போராட்டம் முடிவுக்கு வராமல் வலுப்பெற்று எரிகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் பஸ்நிலையத்தின் அருகில் கல்லூரி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடைவீதியில் அமர்ந்தபடி 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடத்தி வரும் இவர்களது போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு தந்து வருகின்றனர். இதேபோன்று அரியலூர் மாவட்டம் திருமாணுரில் 3 வது நாளாக மக்கள் சேவை இயக்கம் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு, இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருமானூரை அடுத்த கீழப்பழுவூரில் இரு இடங்களில் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விக்கிரமங்கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தா.பழூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து காளை மாடுகளுடன் அமைதி ஊர்வலம் நடத்தினர். பின்னர் சுத்தமல்லி பிரிவு சாலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து தா.பழூர் வணிகர் கூட்டமைப்பு சார்பில் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து அமைதி ஊர்வலம் நடத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆண்டிமடத்தில் மாட்டு வண்டியுடன் வருகை தந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். சுத்தமல்லியில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டத்தில் இரு இடங்களில் அமர்ந்து கொண்டு 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி பதிவு செய்தனர். இதேபோன்று செந்துறையில் பொன்பரப்பி, மருதூர், இலையூர், வாரியங்காவல் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பேரணியாக இறந்தவர்களை ஏற்றி செல்லும் ஊர்தியில் கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட குளிர்பான வகைகளை வைத்து மாலை அணிவித்து ஊர்வலமாக ஜெயங்கொண்டம் நகரைசுற்றி வலம் வந்து அண்ணாசிலை அருகே இறுதி ஊர்வலத்தை முடித்தனர். ஜெயங்கொண்டத்தில் நான்கு ரோட்டில் இந்து முன்னணி சார்பில் பீட்டாவின் உருவ பொம்மையை எரித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஒன்றிய தலைவர் பழனிசாமி, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த மேலப்பழுவூர், கல்லகம் கேட், கீழப்பழுவூர், உடையார்பாளையம், அங்கராயநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
3,000 கடைகள் அடைப்பு:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை வணிகர்கள் அடைத்து அமைதி ஊர்வலம் நடத்தினர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆட்டோ மற்றும் வேன், மினி பஸ் ஓட்டுனர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை.
English summary:
Ariyalur: Removing the ban on jallikattu Ariyalur district to call for competition, the number of students in the 5th day of demonstrations, picket, march peacefully, that shut down are engaged in continuous struggle. Remove the ban on jallikattu, jallikattu, manjuvirattu, rekla racing, cock-fighting, including the Tamil cultural events should be held freely.