புதுடெல்லி : ராணுவத்தில் தரப்படும் உணவில் ஏற்படும் குறைபாடு உள்பட பல்வேறு குறைகளை வீரர்கள் சமூக ஊடகங்களில் பரப்புவது குற்றம். அப்படி செய்யும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரித்தார்.
12 லட்சம் வீரர்கள் :
இந்திய ராணுவத்தில் 12 லட்சம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் எல்லைப்பகுதிகளிலும், நக்சல் தீவிரவாதிகள் தாக்குதல் உள்ள மாநிலங்களிலும் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் ராணுவ வீரர்களுக்கு தரப்படும் உணவில் குறைபாடு உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகத்தில் செய்தி வெளியானது.
இது குறித்து ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்ததுடன் உரிய முறையில் உணவு அளிக்கப்படுவதாக கூறியது. தேஜ் பகதூர் யாதவ் என்ற ராணுவ வீரர் உரிய உணவு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முதலில் சமூக ஊடகத்தில் கூறினார். அதனை ஜவான் நாயக் பகத் முழுமையாக ஆதரித்தார். ஒட்டு மொத்த ராணுவ வீரர்களின் மனக்குமுறலையும் புகாராக கூறிய ஜவான் தேஜ் பகதூர் யாதவ் இதனை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் என ஜவான் பகத் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டாவது ஜவான் நாயக் ராம் பகத் ராணுவ நிர்வாக குறைபாடு குறித்த புகாரை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இது போன்று தொடர்ந்து புகார்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தால், அவர்கள் குற்றாவாளிகள் என கடும் தண்டனை விதிக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary:
New Delhi: The deficiency in the diet given to military veterans, including the various shortcomings of social media to spread the blame. So the players will be punished and warned that the Army chief Bipin Rawat.