புதுடில்லி: டில்லியில் நடந்த குடியரசுதின விழாவில் ராணுவத்திற்கான உயரிய விருதான அசோக சக்ரா அசாமை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மனைவியிடம் வழங்கப்பட்டது. அசாமை சேர்ந்த ஹவில்தார் ஹங்பான்தாதா என்ற வீரர் காஷ்மீரில் 2016 ல் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்று தன்னுயிரையும் நீத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் 2017 ம் ஆண்டுக்கான அசோகசக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் அவரது மனைவி ஷாசன்லாவாங் தாதா, ஜனாதிபதியிடமிருந்து விருதை பெற்று கொண்டார்.
English Summary:
Delhi for Defence at the ceremony held at the prestigious Ashoka Chakra republic day awarded to the wife of the deceased soldier.
English Summary:
Delhi for Defence at the ceremony held at the prestigious Ashoka Chakra republic day awarded to the wife of the deceased soldier.