சென்னை: ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை, முறையான சட்டமாக மாற்ற இன்று மாலை, 5:00 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி, சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர் உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 6 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து ஒரு அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இருப்பினும், இது நிரந்தரமான சட்டம் இல்லை என, போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து இன்று மாலை, 5:00 மணிக்கு சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அவசர சட்டத்திற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிய வந்துள்ளது. இத்துடன் பிப்., 1 ம் தேதி வரை சட்டசபை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
English Summary:
Chennai: Jallikattu opened for emergency legislation to change the proper law today at 5:00 pm there will be a special meeting of the Tamil Nadu Legislative Assembly.