
தனது அரையிறுதி போட்டியில் குரோஷியாவை சேர்ந்த மிர்ஜனா லுசிக்-பரோனியை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வென்றார்.
முன்னதாக நடந்த முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், 6-7(3) 6-2 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த கோகோ வான்டெவெக்கைத் தோற்கடித்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வீனஸ் வில்லம்ஸ் வென்றார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செரீனா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Sisters, Serena and Venus Williams at the Australian Open tennis matches, both semifinals victory, They are in the finals playing opposing each other.