புதுடில்லி: பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கியது சுப்ரீம் கோர்ட்.
இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை வழங்கியது. நிர்வாகிகளுக்கு அதிகபட்ச வயது 70, ஒரு மாநிலத்திற்கு ஒரு ஓட்டு உள்ளிட்ட அம்சங்களுக்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த டிச.16ல் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
எதிராக செயல்பட்டாரா:
தணிக்கை அதிகாரி நியமனம் குறித்து ஐ.சி.சி.,யிடம் விளக்கம் கேட்டார் பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர். இதனை பிரமாணப்பத்திரத்தில் மறைத்ததாக சர்ச்சை எழுந்தது.
இது, நிரூபிக்கப்பட்டதால், பி.சி.சி.ஐ., தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. லோதா குழு பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ., மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary:
New Delhi: BCCI president Anurag Thakur, Secretary Ajay Shirke repealed by the Supreme Court. Indian cricket board (BCCI) about the need to reform, retired Justice Lodha Group recommendations. The maximum age of 70 for executives, a state of features, including a drive to the BCCI objected. Dec 16, the Supreme Court heard the case and condemned in the past.