புதுடில்லி : ‛பா.ஜ., கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை' என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத அரசியல் கிடையாது:
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது: பா.ஜ., ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை; எதிர்காலத்திலும் இது போன்ற அரசியலை நடத்தாது. அப்படி நடத்தியிருந்தால், லோக்சபாவில் பெரும்பான்மை பலம் பெற்றிருக்க முடியாது. உ.பி., தேர்தல் களத்தில் மத ரீதியிலான அரசியலை பா.ஜ., முன்வைக்காது.
சரியான தீர்ப்பு:
மதம், ஜாதியை முன்வைத்து ஓட்டு கேட்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது மிகவும் சரியான தீர்ப்பு. அத்தீர்ப்புக்கு இணங்கவே பா.ஜ., செயல்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, மதச்சார்பின்மை என கூறி கொள்ளும் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
New Delhi: "The BJP, the party never conducted any political, religious discrimination," the Union Minister Rajnath Singh said.