சண்டிகர் : காதி டைரி மற்றும் காலண்டரில் மகாத்மா காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் பெற்றிருப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அரியானா அமைச்சர் அனில் விஜ்ஜின் கருத்திற்கு காங்., துணைத் தலைவர் ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
'தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம்' வெளியிட்டு உள்ள டைரி மற்றும் காலண்டர்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இது பெரும் எதிர்ப்பு கிளப்பி உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அரியானா மாநில பா.ஜ., அமைச்சர் அனில் விஜ், 'காந்தியின் பெயருடன் காதியை இணைத்த பின்னர் நாட்டில் காதி தொழில் தலைதூக்க முடியாமல் அழிந்து வந்துள்ளது. காலண்டரில் காந்தியின் படத்துக்கு பதிலாக மோடியின் படம் இடம்பெற்றிருப்பது நல்ல விஷயம். அவரது படத்துடன் அச்சடிக்கப்பட்டதால் பண மதிப்பு இழப்பும் தொடங்கி விட்டது. ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் படம் படிப்படியாக நீக்கப்படும். காந்தியைவிட மோடியின் பெயருக்கு பிரபலமான வர்த்தக அடையாளம் உள்ளது' என தெரிவித்துள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அனில் விஜ்ஜின் கருத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், ''சர்வாதிகாரிகளான ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோரும் சக்தி வாய்ந்த வர்த்தக அடையாளம்தான். அதற்காக அவர்களின் படங்களை பயன்படுத்த முடியுமா '' என்று குறிப்பிட்டுள்ளார்.
English summary:
'National Khadi Village Industries Commission, "issued a photograph of Mahatma Gandhi in the diary and calendars to replace the photo of Modi was underway.