ஜம்மு : காஷ்மீரின் மசில் பகுதியில் இன்று மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தொடரும் பனிப்பொழிவு :
கடந்த சில நாட்களாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதில் ராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, இதுவரை, 22 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இவர்களில், 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேடுதல் பணிகள் தீவிரம் :
இந்நிலையில் இன்று மசில் பகுதியிலும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பனிச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் புதையுண்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரில் பனிப்பொழிவு தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary:
Jammu and Kashmir avalanche Much has occurred in the area again today. Where rescue operations are ongoing.