புதுடில்லி: பொங்கல் பண்டிகை மீண்டும் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு:
மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதனை மறுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதா, இந்த முடிவு கடந்த காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் எடுக்கப்பட்டதாக பதிலளித்திருந்தார். பொங்கல் பண்டிகையை கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மாற்றம்:
இந்நிலையில், பொங்கல் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
English Summary:
NEW DELHI: Pongal holidays included in the list again.