அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, அலங்காநல்லூர் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
போலீஸ் குவிப்பு :
ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது அலங்காநல்லூர். கடந்த 3 நாட்களாக சுப்ரீம் கோர்ட் தடையை மீறி தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று அலங்காநல்லூரிலும் இன்று நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் கிராமம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
மாடுகளுக்கு பூஜை :
சம்பிரதாய நடவடிக்கையாக 4 கோயில் மாடுகளுக்கு மட்டும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து வீடுகள் மற்றும் கடைகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தடையை மீறி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்ற நம்பிக்கையில் வாடிவாசல் முன்பு அதிக அளவில் பொதுமக்களும், அசம்பாவிதங்களை தடுக்க போலீசாரும் கூடி உள்ளனர்.
English Summary:
Alanganallur: Madurai district in Alanganallur Jallikattu not be allowed to strike to protest the shutdown has been held. To prevent risks, Alanganallur has been brought under control over the police.