சென்னை: சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கலைந்து செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதாரங்கள் இல்லாமல், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி விட்டது.இதையடுத்து, வழக்கறிஞர் சங்கர்சுப்பு தனி நீதிபதி மகாதேவன் முன் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று, மதியம் 2.15 மணிக்கு விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்.
English Summary:
Stick to them to stop; The injured have been requested in order to give the treatment. A bench headed by the Chief Justice, without evidence, claiming that it can not intervene in this matter , lawyer shankarsubu Mahadevan single judge went ahead with these issues. This matter is acceptable for an emergency case, the judge agreed to hear the afternoon at 2.15 pm.