பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரத்தை வெளியிட்டனர்.
சொத்து விவரம்:
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். நிதிஷ் குமார் மற்றும் அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை நேற்று முன்தினம்(டிச.,31) வெளியிட்டனர்.
4 மடங்கு அதிகம்:
நிதிஷ் குமாரிடம் ரூ.16.49 லட்சம் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், டில்லியில் ரூ.40 லட்சம் மதிப்புடைய 1,000 சதுரஅடி பரப்பில் பிளாட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 10 மாடுகள் மற்றும் 5 கன்றுகள் உள்ளன. அவருக்கு ரூ.3.79 லட்சம் வாகன கடன் நிலுவையில் உள்ளது. அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.56.49 லட்சம்.
அதேசமயம், அவருடைய மகன் நிஷாந்திடம் தந்தையை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக ரூ.2.36 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் மகன்களான, பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் சுகாதார துறை அமைச்சர் தேஷ் பிரதாப் யாதவ்வும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். பிற அமைச்சர்களும் தங்களும் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
English summary:
Patna: Bihar Chief Minister Nitish Kumar and 28 ministers released details of their property.