பாட்னா : பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 2லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதேப்போன்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 4லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது என அறிவித்தார். விபத்தில் தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் அளிக்கப்படுவதாக பிரதமர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ட திருவிழா:
பீகார் மாநிலம் பாட்னாவில், மாநில சுற்றுலாத்துறை சார்பில் பட்டம் பறக்க விடும் திருவிழா நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் வீட்டிற்கு கங்கை நதியில் படகின் மூலமாக வந்த போது நேற்று முன்தினம் கூடுதல் சுமை காரணமாக கவிழ்ந்தது. அந்த படகில், மொத்தம் 40 பேர் இருந்தார்கள் . அவர்கள் சபல் பூர் ஆற்றுப்படுகை பட்ட திருவிழாவை பார்த்த பின்னர் ராணிகட்டுக்கு(பாட்னா) வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
உயர் விசாரணை:
இந்த பயங்கர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 24 ஆக அதிகரித்தது. மகர சங்கராந்தி விழாவையொட்டி நடந்த பட்ட விழா கோலாகலமாக நடந்த நிலையில் இந்த துயர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து, உயர் மட்ட விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் நிதி யுதவி தரப்படுகிறது. இந்த உதவி பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது.அதேப்போன்று இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 4லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதன் படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய , மாநில அரசின் நிதி என மொத்தம் ரூ6லட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
English Summary:
Patna: Bihar state capital of Patna in the boat accident death toll rose to 24. Lost their lives in this accident would be given Rs 2 lakh each to the Prime Minister declared. Bihar Chief Minister Nitish Kumar like that Rs 4 lakh each to the families of the dead would be given financial assistance. Given the serious injured in the accident, the Prime Minister announced Rs 50 thousand mentioned.