சென்னை: மெரினா கடற்கரையில் கடும் குளிரிலும் இளைஞர்களின் அனல் தகிக்கும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னையில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு வெறும் 50 பேருடன் துவங்கிய போராட்டம் 18 மணி நேரத்ததை தாண்டி நள்ளிரவு தீவிரம் குறையாமல் உள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரியும் போராட்டம் நடந்தது. முதலில் சிறியதாக துவங்கிய போராட்டம் நேரம் செல்ல செல்ல ஆதரவு பெருகியது. இத்தகவலை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சென்னை மெரினாவை நோக்கி படையெடுக்க துவஙக்கினர். சுமார் 50 பேருடன் துவங்கிய போராட்டத்தில் தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
நள்ளிரவிலும் போராட்டம்:..
அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் தற்போது சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. நள்ளிரவிலும் போராட்டம் வலுகுறையாமல் நடந்து வருகிறது. சென்னை மெரினாவில் பெரும் அளவில் போராட்டம் நடைபெற்றாலும் அப்பகுதியில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. போராட்டகாரர்களும் சாலை மறியல் முயற்சியோ அல்லது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த முயற்சிக்கவும் இல்லை. மேலும் இரவு நேரம் என்பதால் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டகாரர்கள் பேராராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் பெரும் ஆதரவு:
ஜல்லிகட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்றாலும் அதன் மீதான தடை நீக்க பெண்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் நள்ளிரவில் நடக்கும் போராட்டங்களுக்கு பெண்களும் பெரும் ஆதரவும் அளித்து வருகின்றனர். பலர் குடும்பத்துடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்,
நாளையும் போராட்டம்:
ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த பலர் ஒருங்கிணைப்புகளை நடத்தி வருகின்றனர். நாளை கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறுக்கணித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் அழைப்புகளை விடுத்து வருகின்றனர்.
சமூக வலைதளம்:
ஜல்லிகட்டிற்கு தமிழகம் முழவதும் நடந்து வரும் இந்த போராட்டம் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே ஒன்றிணைக்கப்படுகிறது. சமீப காலத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பங்கேடுத்து வரும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போராட்டம் பலரை திருப்பி பார்க்க வைத்துள்ளது.
English Summary:
Chennai: Marina Beach extinguished the severe cold and heat of the struggle of youth is intensifying.