திருப்பதி: வரும் 2030க்குள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்று நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
கட்டுப்படுத்தக் கூடாது:
திருப்பதியில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: கொள்கை, தலைமை பண்பு உழைப்பால், சமூகத்தை உயர்த்திய விஞ்ஞானிகளுக்கு தேசம் நன்றி கடன்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை நாம் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். பல துறைகளில் அறிவியல் தொழில் நுட்பத்தை வளர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது.
சேவை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். நமது சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், சர்வதேச அளவில் வழிநடத்தும் அளவில் உயர்த்தி கொள்ள வேண்டும். சிறந்த முடிவுகளை தர, அறிவியல் அமைப்புகளை நாம் கட்டுப்படுத்தக்கூடாது.
சம வாய்ப்பு:
அறிவியல் அடிப்படை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை, தொழில்துறையில் பயன்படுத்துவதன் மூலம், நமது வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் மக்களிடம் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளை அறிவியல் நிறைவேற்ற வேண்டும். அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
நமது திட்டங்களில், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் ஆராய்ச்சி செய்யும் இந்தியர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலை, ஐஐடிக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அறிவியல் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். அறிவியல், பொறியியல் துறைகளில், பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண் விஞ்ஞானிகளை பங்கேற்க செய்ய வேண்டும். 2030ல் அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த மூன்று நாடுகளில் இந்தியா இருக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
English Summary:
Tirupati: By 2030, science and technology will be developed in the three countries, India, Modi said.