சென்னை: தன்னை ஒரு முழுமையான அரசியல்வாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதில், முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியாக செயல்படுவதாக, அவரது உறவுகள் சொல்லிச் சொல்லி சந்தோஷப்படத் துவங்கி உள்ளனர்.
நெருக்கடி:
ஜெயலலிதா மறைவுக்குப் பின், நெருக்கடியான காலகட்டத்தில், மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம். அது முதல், அவருக்கு நாலாபுறம் இருந்தும் சிக்கல் மேல் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சொந்த கட்சியைச் சேர்ந்த சசிகலா, கட்சியின் பொது செயலர் ஆகி விட, அவரை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பன்னீர்செல்வம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களே, பன்னீரை பதவி விலகச் சொல்லி, பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் மூலம் நெருக்கடிகள் கொடுத்தனர். ஆனால், பன்னீர் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.
இடைஞ்சல்:
அடுத்த கட்டமாக, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலாவின் காலில் பன்னீரை விழ வைத்து, அதை பிரதானமாக வெளியில் தெரியப்படுத்தினர். இது மக்கள் மத்தியில் பன்னீருக்கு அவப் பெயரை உண்டு பண்ணினாலும், மக்களின் அனுதாபத்தை இதன் மூலம் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
அதேபோல, பன்னீர்செல்வம், முதல்வராக சிறப்பான பணியை மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக, எல்லா நிலைகளிலும் அவருக்கு இடைஞ்சல் மேல் இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்தனர். அதனால்தான், முதல்வராக பன்னீர்செல்வம், பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதே கருத்தை வலியுறுத்தி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா பெயரிலும் அறிக்கைகள் வரத் துவங்கின; பிரதமருக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டன.
ஆலோசனை:
ஆனால், இந்த விஷயங்களில் எல்லாம் சிறிதும் கவனம் செலுத்தாத பன்னீர்செல்வம் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று, பணிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தினந்தோறும் தலைமைச் செயலகம் வரும் அவர், ஒரு முழுநேர முதல்வராக இருந்து பணியாற்றுகிறார். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் அபூர்வ வர்மா ஆகியோரை அடிக்கடி அழைத்து ஆலோசனைகள் கேட்கும் பன்னீர்செல்வம், அவர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுகிறார். அவர்கள் அதிரடியாக செயல்பட ஆலோசனைகள் சொல்லும்போது, ‛எனக்கு அதிரடி முக்கியமல்ல; அரசு, சிறப்பாக நடக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஆலோசனை சொல்லுங்கள்' என்று சொல்லி, அதற்கேற்ப ஆலோசனைகளை கேட்டு செயல்படுகிறார்.
நேர்த்தியான முதல்வர்:
ஜல்லிக்கட்டு விஷயத்தில், அதிகாரிகளின் ஆலோசனைகளை ஏற்றுதான், அவர், சரியான நேரத்தில் டில்லிக்குச் சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். அதன்பின், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை போலீசைக் கொண்டு விரட்டி அடித்த விதத்திலும், தான் ஒரு சிறந்த, நேர்த்தியான முதல்வர் என காட்டிக் கொண்டு விட்டதாகவே, உறவுக்காரர்கள், பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டுக்கு தொடர்ந்து சான்றிதழ் கொடுப்பதோடு, அதையே சொல்லி மகிழ்கின்றனர்.
English summary:
Chennai: himself as a full-fledged politician, the best manager is to present the principal Panneerselvam act firmly, saying what his relationships are starting to be merry.