சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலாவின் விருப்பம் இல்லாமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் பன்னீர்செல்வத்தை, பதவியில் இருந்து இறங்கி, சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன், கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது. அந்த நெருக்கடிகள் தற்போது இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா மறைந்ததும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த சசிகலா, அடுத்த கட்டமாக, முதல்வர் பதவியிலும் உடனடியாகவே அமர்ந்து விட வேண்டும் என கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வந்தார். ஜோதிடர்களும் அதற்கேற்ப நாள், நட்சத்திரம் குறித்துக் கொடுத்தனர். ஆனால், போயஸ் தோட்டத்துக்கு வந்திருக்கும் சில ஜோதிடர்கள், தற்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் சரியில்லை என்று கூறியுள்ளனர். ஒருவேளை, பன்னீர்செல்வத்தை தொந்தரவு செய்து, அவரை பதவி இறக்கம் செய்து, அப்பதவியில் அமர்ந்தாலும், சசிகலா தலைமையிலான அரசு, வெகு காலம் நீடிக்காது. கொஞ்சம் பொறுமையாக எதையும் அணுகுவதே நல்லது என கூறியுள்ளனர்.
கட்சியை வழி நடத்த எடுக்கும் முயற்சி:
இதற்கிடையில், கட்சியிலும் தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால், இந்த சூழ்நிலையில், முதல்வர் பதவியையும் ஏற்றுக் கொண்டு, ஒரே நேரத்தில் கூடுதல் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என, சசிகலா நினைக்கிறார். அதனால்தான், முதல்வர் பதவியில் உடனடியாக அமர வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை தள்ளிப் போட்டுள்ளார். ஆனால், இதுதான் சரியான வாய்ப்பு. இந்த நேரத்தை விட்டு விட்டால், வேறு நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. யார் சொன்னாலும் கேட்க வேண்டியதில்லை.
சசிகலா திடீர் தயக்கம் :
பன்னீர்செல்வத்தை நிர்ப்பந்தித்து, பதவி விலகச் சொல்லிவிட்டு, முதல்வர் பதவியில் அமருங்கள். கட்சியை வழி நடத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, நாங்கள் ஒத்துழைப்பாக இருப்பது போல, ஆட்சி - அதிகாரத்தில் இருந்து நீங்கள் செயல்படுவதற்கும் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என, சசிகலாவின் உறவுகள் கூறுகின்றன. ஆனால், துணிச்சலாக முடிவெடுக்க சசிகலா திடீர் தயக்கம் காட்டி வருகிறார்.
இருந்தாலும், உறவுகளின் நெருக்கடி அதிகமாக இருப்பதால், என்ன செய்வது என்ற குழப்பத்தில் சசிகலா உள்ளார். இதை அறிந்த பன்னீர்செல்வம், சசிகலா, எதையும் நன்கு யோசித்துத்தான் செய்வார் என, சற்று ஆறுதலடைந்து கூறி வருகிறார். இருந்த போதும், இந்த நிலை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியாதாதால், பன்னீர்செல்வம் நிம்மதி இல்லாமலேயே பதவியில் தொடருகிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English Summary:
Chennai: After her death, without the intention of the Chief Minister Shashikala Paneerselvam sitting in office, down from office, Shashikala to give in to the last few days before, given the severe crisis.