பாக்தாத் - இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீஸார் தரப்பில், பாக்தாத்தின் வடமேற்குப் பகுதியில் நேற்று மக்கள் கூடியிருந்த இடத்தில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர். 61 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள். பாக்தாத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் பாக்தாத்தின் சந்தைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 54 பேர் காயமடைந்தனர். இராக்கில் ஐ.எஸ் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இழந்து வருவதால் பொதுமக்கள் பகுதிகளை மையமாகக் கொண்டு தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. எனவே இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Baghdad - Iraq's capital, Baghdad, killing 32 people in a car bombing. Elaborating on the part of the police, the people gathered yesterday in the northwestern part of Baghdad, a bomb placed in a car. In which 32 people died. 61 people were injured. Most of the victims were laborers. It was the second major attack in Baghdad last week, said