ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை என்ற இலக்கை அடைய இளைஞர்கள் முகவர்களாக செயல்பட்டு உதவ வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கணக்கில் கொண்டுவரப்படும். இதனால், ஊழல் ஒழிக்கப்படும். மத்திய பட்ஜெட்டின் மதிப்பு ரூ.18 லட்சம் கோடியாக இருக்கும். அவற்றில் ரூ.6 லட்சம் கோடி வரை ரொக்கமற்ற பரிவர்த்தனை திட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
அனைவரும் வருமான வரி செலுத்தாததே மொத்த பிரச்னைக்கும் காரணம் ஆகும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு இட்டுச் செல்லும். இதன்மூலம், கருப்புப் பணம், ஊழல், கள்ள நோட்டுகள் ஆகியவை ஒழிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும். ரொக்கமற்ற பரிவர்த்தனையை அனைவரும் பயன்படுத்துமாறு இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
English Summary : Cashless transaction: to help young people.Cashless serving as agents to help young people to achieve the goal of a cash transaction that called HRD Minister Prakash Javadekar.