லக்னோ: ஜாதி, மதங்களை கடந்து ஓட்டு போடுங்கள். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஓட்டு போட வேண்டும் என உ .பி., மாநிலம் லக்னோவில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் பேசுகையில்:
உத்திரபிரதேச மாநிலம் வாஜ்பாயின் கர்ம பூமி ஆகும். இங்கு இப்போது கூடியிருக்கும் கூட்டம் போல் நான் இதுவரை பார்த்தில்லை. இது மாற்றத்தின் அறிகுறியாக வீசும் காற்று ஆகும். இது பா.ஜ.,வுக்கு கிடைத்திருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
இங்குபா.ஜ.,வும் ஆட்சிக்கு வரும், வளர்ச்சியும் வரும். இங்குள்ள வாக்காளர்களை கேட்கிறேன், மாநில வளர்ச்சிக்கு ஓட்டு போடுங்கள். ஜாதி, மத அடிப்படையில் ஓட்டு போட வேண்டாம். உத்திரபிரதேச மாநில வளர்ச்சி மிக முக்கியமானது. இது இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் . அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சி பாதிக்கக்கூடாது. இங்குள்ள விவசாயிகள் மத்திய அரசின் உதவியை பெற இடையூறு செய்யப்படுகிறது.
ரவுடிகள் ராஜ்யம்:
உ .பி.,யில் பா.ஜ., ஆட்சிக்கு வரும். கடந்த 14 ஆண்டுகளாக உ .பி.,யில் வளர்ச்சி இல்லை. தற்போது வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இங்கு நடந்த பா.ஜ., ஆட்சி நிர்வாகம் மக்களுக்கு தெரியும். உ .பி., மக்களை பா.ஜ.,வால் மட்டுமே காப்பாற்ற முடியும். உபி.,யில் நடக்கும் ரவுடிகள் ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா ? பா.ஜ.,வுக்கு வாய்ப்பு தாருங்கள்.
நான் ஊழலை ஒழிக்க நினைக்கிறேன்:
சமீபத்திய பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சி எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இவர்கள் என்னை வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றனர். நான் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறேன். ரூபாய் நோட்டுகளை பதுக்குவதில் எதிர்கட்சிகள் ரொம்ப பிஸியாக இருக்கின்றனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.
English summary:
Lucknow: caste, religions Voting passed. As for the development of the country will be put to vote pi., The state's campaign meeting in Lucknow, Modi appealed. He also said: