புதுடில்லி : காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு :
காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடிநீர் திறந்து விட வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7 ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
பிப்ரவரி 7 ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வாதம் :
முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மறுஉத்தரவு வரும் வரை கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
English summary:
NEW DELHI: 2,000 cubic feet of water per second to open in the Cauvery Karnataka State Supreme Court today ordered back