சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. மாலத்தீவு அருகே மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் கடலோர மாவட்டத்தின் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர், நாகை மாவட்டத்தில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: Chennai Meteorological Department director Balachandran said: Depression is a low pressure area in the Bay of Bengal to the southwest.
English summary:
Chennai: Chennai Meteorological Department director Balachandran said: Depression is a low pressure area in the Bay of Bengal to the southwest.