சென்னை: டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை ஓபன் போட்டித் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தெற்கு ஆசியாவின் ஏடிபி அந்தஸ்து பெற்ற ஒரே போட்டியான சென்னை ஏர்செல் ஓபன் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இரட்டையர் பிரிவில் விளையாட இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன், மற்றும் ஸ்ரீராம் பாலாஜி ஆகியோருக்கு வைல்டு கார்டு முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஜீவன் நெடுஞ்செழியன், பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 18 முறை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரேசிலின் ஆந்த்ரே சா இணைந்து விளையாட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் 6ம் இடம் உள்ள குரோஷிய வீரர் மரின் சிலிச், கடந்த ஆண்டு இறுதி போட்டி வரை முன்னேறிய போர்னா கோரிக், ஸ்பெயின் வீரர்கள் ராபர்டோ பாடிஸ்டா, ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸ், பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேர் உள்பட உலகின் முன்னணி வீரர்கள் பலர் களமிறங்குகின்றனர்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், தொடர்ச்சியாக 3 முறை பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா இம்முறை பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், முன்னணி வீரர்கள் பலர் இடம் பெற்றிருப்பது ஆறுதல் அளிக்கிறது. குறிப்பாக, உலக தரவரிசையில் தற்போது 6ம் இடம் வகிக்கும் குரோஷியா வீரர் மரின் சிலிச் 3வது முறையாக சென்னை ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் ஏற்கனவே 2009 மற்றும் 2010ல் இங்கு பட்டம் வென்றுள்ளார்.
English Summary:
Chennai: The Chennai Open tennis tournament with fans eagerly anticipated festivity begins today. South Asia's ATP Aircel Chennai Open tennis tournament, the only status, Nungambakkam stadium SDAD going from today till the 8th.