மறைந்த தமிழக முதலமைச்சரும்அ.தி.மு.க நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல்தலையும் உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆருக்கு, அவரது மகத்தான மக்கள் சேவையை கருத்தில்கொண்டு, நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர் தமிழக மக்களால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்டதையும் சசிகலா நினைவுகூர்ந்துள்ளார்.
பாரத் ரத்னா விருது :
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதை இந்திய அரசு வழங்கி கவுரவித்தது - டாக்டர் எம்.ஜி.ஆர். எத்தனையோ திட்டங்களை தமது ஆட்சிக் காலத்தில் தொடங்கி வைத்தபோதிலும், 1982-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் மகத்தான வெற்றிபெற்றது - இதன் மூலம், மதிய உணவு மையங்களில் லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் வயிறார உணவு உண்டனர் - இந்த திட்டம் அமல்படுத்த சாத்தியமானது அல்ல என கூறப்பட்டபோதிலும், எம்.ஜி.ஆர். இத்திட்டத்தை செயல்படுத்தி காட்டினார் - இதன் மூலம் குழந்தைகளுக்கு சூடான புதிதாக சமைக்கப்பட்ட உணவு, லட்சக்கணக்கான பசியால் வாடிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன - இதன் மூலம் பசி ஒழிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்தது - இத்திட்டம் இன்றும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது - இந்தியாவில் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது - இதற்கு, நாடு முழுவதிலும் மட்டுமின்றி, ஐ.நா. சபையிலும் கூட பாராட்டுகள் குவிந்தன என்று கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
மகளிருக்கு சிறப்பு பஸ் :
இதுமட்டுமின்றி, எம்.ஜி.ஆர். மகளிருக்கு என சிறப்பு பேருந்துகளை அறிமுகம் செய்தார் - இப்பேருந்துகள் தமிழக மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது - எம்.ஜி.ஆரின் ஆட்சி மக்கள் நலனை அடிப்படையாகவே கொண்டு செயல்பட்டு வந்தது - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அமல்படுத்தினார் - குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது - எம்.ஜி.ஆர். பொது விநியோக திட்டத்தை செம்மையாக செயல்படுத்தினார் - இதன்மூலம் ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்தன - இதன் மூலம், அந்த மக்கள் எம்.ஜி.ஆரை நேசிக்கத் தொடங்கினர் - எம்.ஜி.ஆர். மனிதாபிமான நிர்வாகி என்பது மட்டுமின்றி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை செயல்படுத்துவதில் கடுமை காட்டினார் - தமிழகத்தில் இருந்து நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவதில் அவர் முக்கிய பங்காற்றினார் - 1980களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக அவர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக இன்றுவரை நக்சலைட் இயக்கம் தமிழ்நாட்டில் தலைதூக்கவில்லை - எம்.ஜி.ஆரின் ஆட்சி அக்கால தலைவர்களால் மிகச்சிறந்த ஆட்சி என போற்றப்பட்டது என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த நடிகராகவும், மாபெரும் அரசியல்வாதியாகவும் விளங்கிய எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டில் தெய்வமாகவே போற்றப்பட்டார் - 1962ல் தமிழக சட்டமேலவை உறுப்பினராக பொறுப்பேற்ற அவர், 1967ல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் - 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த அவர், 1973-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அவரது கட்சி பெற்றிபெற்றது - இதனைத் தொடர்ந்து, 1977ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது - எம்.ஜி.ஆர். 1977-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று, 1987-ம் ஆண்டு டிசம்பரில் அவர் மறையும் வரை ஆட்சி அதிகாரத்தில் நீடித்தார் - இதுவரை இந்த சாதனையை எவரும் புரிந்ததில்லை என்றும் சசிகலா புகழாரம் சூட்டியுள்ளார்.
கொடை உள்ளத்திற்கு எல்லை இல்லை :
எம்.ஜி.ஆர்., அவரது மனிதாபிமான மற்றும் கொடை உள்ளத்திற்காக பெரிதும் பாராட்டப்பெற்றவர் - தீவிபத்து, வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின்போது, அவர் தனிப்பட்ட முறையில் நிவாரண உதவிகளை வழங்கினார் - நாட்டுப்பற்றுமிக்க அவர், 1962-ல் சீனாவுடன் நடந்த போரின்போது முதல் நபராக நன்கொடை வழங்கினார் - போர் நிவாரண நிதிக்கு 75 ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுத்தார் - அவரது கொடை உள்ளத்திற்கு எல்லையே கிடையாது - ராமாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தை, பேச இயலாத, கேட்க இயலாத குழந்தைகளின் பள்ளிக்காக எழுதி வைத்தார் - அவருக்குச் சொந்தமான சத்தியா ஸ்டூடியோ மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டது என்றும் கழகப் பொதுச் செயலாளர் சசிகலா நினைவுகூர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் உருவ நாணயம் -தபால் தலை வெளியிட வேண்டும்:
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திய அவர், மக்களின் உள்ளஉணர்வுகளை புரிந்துகொண்டு செயல்பட்டார் - செயல்வேகம் மிக்க அவர், புகழின் உச்சியில் இருந்தபோதிலும், கீழ்மட்டத்தில் இருந்தவர்களுடனும் தொடர்பில் இருந்து வந்தார் - மறைந்த எம்.ஜி.ஆர்., சாதி, இனம், மதம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் - ஏழை-எளிய மக்கள், குறிப்பாக, மகளிர் நலன்களை பாதுகாப்பதற்காக பாடுபட்டவர் - எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஈர்த்த உன்னத தலைவராக விளங்கினார் - மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டவர் - பசி மற்றும் வறுமையை ஒழிக்க, அவர் மேற்கொண்ட முயற்சிகளும், குழந்தைகளுக்கு கல்வி வழங்க அவர் செயல்படுத்திய திட்டங்களும் இளைஞர்களுக்கு அவரை முன்னுதாரணமாக மாற்றியது - அவரது உறுதியான தலைமை, ஒழுங்கு கட்டுப்பாடு, மனிதாபிமான ஆட்சி முறை, பொதுசேவை, பழைய ஆலயங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களை பாதுகாக்கும் ஆவல், ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவர் காட்டிய போராடும் குணம் ஆகியவை இன்று வரை மக்களால் போற்றப்பட்டு வருகிறது - கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்த இத்தகைய உன்னத தலைவரின் பிறந்தநாள் நூற்றாண்டுவிழா தொடங்கும் ஜனவரி 17-ம் தேதி, சிறப்பு அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் அவரது உருவத்துடன் வெளியிடப்படவேண்டியது அவசியமாகும் - எனவே, டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நினைவு நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தபால்தலை வெளியிட பிரதமர் உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக பொதுச் செயலாளர் சசிகலா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English summary:
Tamil Nadu MGR's birth centenary of late leader festival of chief minister AlADMK association head for agency, commemorative coin for him, stressing the need to take action immediately published a special stamp, Shashikala AIADMK general secretary, wrote to Prime Minister Narendra Modi.