அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்தை திரும்ப பெற 3 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான மகேஸ்வரி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான புதுச்சேரியை சேர்ந்த மகேஷ்வரியும் ஒருவர்.
'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தங்களது போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:01.ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்02. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நாட்டு இன மாடுகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். 03. வெளிநாட்டு இன மாடுகளுடன் கலப்பினத்தில் விடுவதை தடுக்க வேண்டும் எனக்கூறினார்.
இது வெறும் கண்துடைப்பு:
முதல்வர் உத்தரவுப்படி பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் வாடிவாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியிலிருந்து விலக்கப்பட்டனர். மக்கள் விரும்பும்போது ஜல்லிக்கட்டு நடக்கும் போது போலீசார் பாதுகாப்பு பணிக்கு வருவார்கள் என மாவட்ட எஸ்.பி., தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகேஸ்வரி, இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை எனக்கூறினார்.
English summary:
Alanganallur: jallikkattu ongoing struggle to get back in favor of the integration of the struggle, one of the 3 conditions to be fulfilled, said Maheshwari. Alanganallur Jallikattu in Madurai district, villagers have been agitating referring to the need to establish a permanent settlement. Maheshwari is one of integration, one of the protest Pondicherry.