புதுடில்லி : கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, 53, நீண்ட இழுபறிக்கு பின், நேற்று(ஜன.,15), முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
விலகல்:
கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான, நவ்ஜோத்சிங் சித்து, அந்த கட்சியிலிருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல் வெளியானது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்ட பேச்சு நடத்தியும், அந்த முயற்சி நிறைவேறவில்லை.
குழப்பம்:
இதன்பின், புதிய அமைப்பை துவங்கினார்; அதுவும் போணியாகவில்லை. இதையடுத்து, சித்துவின் கவனம், காங்., பக்கம் திரும்பியது. அக்கட்சி யில் சேருவதற்கு முன்னோட்டமாக, சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர், காங்.,கில் சேர்ந்தார்; ஆனாலும், அதிகாரபூர்வமாக காங்கிரசில் சேராமல் இருந்தார், சித்து. இதனால், அவரது நிலைப்பாடு குறித்து குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், காங்., துணைத் தலைவர், ராகுலை, நேற்று சித்து சந்தித்து, முறைப்படி காங்கிரசில் இணைந்தார்.
வருகை பலம்:
இதுகுறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில், ஆளும் அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவரும், ஒன்று சேர்ந்துள்ளோம். சித்துவின் வரவால், காங்., வலிமையடைந்துள்ளது. தேசிய சிந்தனையும், மனம் திறந்து பேசும் தன்மையும் உடைய சித்து, காங்., ஆட்சி மீண்டும் மலர பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலில் போட்டி?
பஞ்சாபில், காங்., சார்பில், மூத்த தலைவர், அமரிந்தர் சிங், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். தற்போது, அமிர்தசரஸ் தொகுதி, எம்.பி.,யாக இருக்கும் அவர், முதல்வரானால், காலியாகும் அந்த இடத்தில் போட்டியிட, சித்து விருப்பினார். ஆனால், அதற்கான வாக்குறுதியை, காங்., அளிக்கவில்லை. பஞ்சாபில், 117 சட்டசபை தொகுதிகளில், 100 இடங்களுக்கு, காங்., ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அமிர்தசரஸ் கிழக்கு உட்பட, 17 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனவே, சித்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary:
New Delhi : Cricketer-turned-BJP, former MP Navjot Singh Sidhu, 53, after a long tug, yesterday (Jan., 15), formally joined the Congress.