புதுடில்லி : ‛காங்கிரஸ் இல்லாத இந்தியா எப்போதும் சாத்தியமில்லை' என பிரதமர் மோடிக்கு காங்., கட்சி பதிலடி தந்துள்ளது.
சாத்தியமில்லை:
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட காங்., செய்தித் தொடர்பாளர் கபில் சிபில் தெரிவித்ததாவது: மதச்சார்பின்மை என்பதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளம். அதனை அடிப்படையாக கொண்டதுதான், காங்., கட்சியின் கொள்கைகள். காங்., இல்லாத இந்தியா என்பது, மதச்சார்பின்மை, சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் இல்லாத இந்தியாவைத்தான் குறிக்கும்.
தங்களது பிரித்தாளும் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகவே, காங்., இல்லாத இந்தியா என்ற பிரசாரத்தை பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. அவர்கள் நினைப்பது, ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விமர்சனம்:
முன்னதாக பஞ்சாபில் நேற்று (ஜன.,27) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் எனவும், அக்கட்சி இறந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். இதேபோல, ‛காங்., இல்லாத இந்தியா' என்ற பிரசாரத்தை பா.ஜ., முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
English summary:
New Delhi: "India is not always possible without Congress' PM Modi Cong., The party has responded.