சென்னை: ‛‛ ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக காங்கிரசார் தான் வாதாடுகின்றனர்,'' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில், இன்று( ஜன.,28) நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தேசிய கொடியை எரித்தவர்கள்:
சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது, சிலர் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் கோஷம் போட்டது வருத்தம் அளிக்கிறது. தேசிய கொடியை அவமதித்தவர்கள், பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, 2014ல் இருந்து பா.ஜ., ஆதரவு அளித்து வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க, 2016 ஜனவரியில், மத்திய அரசு ஒரு அறிவிப்பாணையை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. அது தொடர்பான விசாரணை தொடர்ந்து இறுதி கட்டத்தில் உள்ளது.
காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்:
இந்த நேரத்தில் மீண்டும் ஒரு அறிவிப்பாணை கொண்டு வந்தால், கோர்ட் அவமதிப்பாகும் என்பதால் தான் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரவில்லை. எனினும், தமிழக அரசு கொண்டு வரலாம் என்று அப்போதே சொன்னோம். அது தான் தற்போது நடந்துள்ளது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வந்துள்ளது. எனவே, காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக, கோர்ட்டில் வாதாடுபவர்கள் காங்கிரசார் தான். ஆனால், அவர்கள் தனிநபர் என்ற நிலையில் செயல்படுவதாக கூறுகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: '' Congress is in favor of the ban argued jallikattu ', Union Minister Nirmala Sitharaman alleged.