சென்னை : கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் தொடர்ந்து பல மாவட்டங்களில் சுப்ரீம் கோர்ட் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு :
ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த தடையை இன்னும் தொடர்ந்து வருகிறது. தடையை விலக்கி, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வந்தன. இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் இந்த போராட்டங்களில் பங்கேற்றனர். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் 2 நாட்களுக்கு முன் கடலூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனையடுத்து பொங்கல் தினமான நேற்று மதுரை - அவனியாபுரம், தேனி - கூடலூர், வேலூர் - காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டமும் நடத்தப்பட்டது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
தொடரும் ஜல்லிக்கட்டு :
இதனால் மாட்டு பொங்கல் தினமான இன்றும் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் மதுரை - முடக்கத்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விளாங்குடி, திண்டுக்கல் - நல்லாம்பட்டி, தஞ்சை - பொட்டுச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக இதுவரை ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுப்பு கொடியுடன் கடையடைப்பு :
மதுரை - பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காததை கண்டித்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடைகள் முன் கறுப்பு கொடி ஏற்றியும், கடைகளை அடைத்தும் மக்கள் எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பாலமேட்டில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English summary:
Chennai: In many parts of the state in the last 2 days was done in defiance jallikattu. In this case, the Supreme Court continues today despite the ban jallikattu has been held in several districts.