சென்னை : 'வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வந்ததால், வரும் நாட்களில், குளிர் மேலும் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளிர் தீவிரமாகும்:
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை நேற்று முடிந்த நிலையில், வட கிழக்கில் இருந்து வீசும் கடல் காற்று முடிவுக்கு வந்துள்ளது. இனி வடகிழக்கில் இருந்து, தரைக்காற்று மட்டுமே வீசும்; அடுத்து குளிர்காலம் தீவிரமாகும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில், 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து, குளிர் அதிகரிக்கும்; இயல்பான வெப்ப நிலை, 22 டிகிரியாக இருக்கும்.
வலுப்பெற வாய்ப்பு:
தற்போது, அந்தமான் மற்றும் சுமத்ராவுக்கு இடையே, வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாகி வருகிறது. இது, 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: "Since the end of the northeast monsoon, and in the coming days, the cold also increase as, meteorological reports.