புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தனிமனிதர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு :
புதுக்கோட்டை மாவட்டம் சீலாநிலைக்கோட்டை பகுதியில் கண்மாய் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, துண்டை அசைத்து காளைகளை அவிழ்த்து விட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதே போன்று சுப்ரீம் கோர்ட் தடையை மீறி புதுக்கோட்டை மாவட்டத்தில் மனம்பட்டி, வடசேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
கட்டுப்பட அவசியமில்லை :
ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ராஜா தடையை மீறி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தது பலரையும் ஆச்சரியம் அடைய வைத்தது. இது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு தனி மனிதன் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. மத்திய, மாநில அரசுகள் தான் கட்டுப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டுக்கு தான் தடை விதித்துள்ளது. மஞ்சுவிரட்டுக்கு இல்லை என பதிலளித்தார்.
English Summary:
Pudukkottai: Bulls loose off jallikattu near Pudukkottai BJP national secretary h.raja, the Supreme Court stated that individuals are not required to abide by.