காத்மாண்டு - சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளநிலையில் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை நேபாளத்திற்கு எடுத்துச் சென்று உள்ளார்.
விசாரணை தீவிரம்:
ஜாகீர் நாயக்கின் இயக்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டு உள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஜாகீர் நாயக்கிற்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நேபாளத்திற்கு சென்றார்:
இந்நிலையில் ஜாகீர் நாயக் தீவிரமைய நடவடிக்கைகளை நேபாளத்திற்கு எடுத்துச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாகீர் நாயக் ஆதரவாளர்கள் சமீபத்தில் காத்மண்டு, கிருஷ்ணாநகர் மற்றும் சிராகா மற்றும் பிர்காஞ் மாவட்டத்திற்கு சென்று உள்ளனர். அவர்கள் அவர்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் மற்றும் இஸ்லாமியம் குறித்து தவறான போதனைகளை வழங்கிஉள்ளனர்.
தீவிரவாத அமைப்புகளுடன்...:
நேபாளத்தில் தடைசெய்யப்பட்ட அல் பைய்யான் இஸ்லாமிக் மையம் மற்றும் இஸ்லாமிக் அமைதி ஆய்வு மையத்திற்கு ஜாகீர் நாயக் நிதிஉதவி வழங்கிஉள்ளார் என்றும் தெரியவந்து உள்ளது. இவை அனைத்தும் பாகிஸ்தானின் சார்கோதாவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய மையத்துடன் தொடர்புடையது, இவ்வியக்கங்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்து வருகின்றனர். பர்கத் ஹாஷ்மியின் சர்வதேச இஸ்லாமிய மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, ஹாஷ்மி கனடாவில் அல்-ஹுடா சர்வதேச இயக்கத்தை நடத்தி வருகிறார், இவ்வியக்கம் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்கிறது.
ஜாகீர் நாயக் மீது குற்றச்சாட்டு:
வங்காளதேச தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டலில் கடந்த ஜூலை 1–ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசும் நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவும் பிடியை இறுக்கியது, இதனால் ஜாகீர் நாயக் இந்தியாவிற்கு திரும்பவில்லை.
English summary:
Kathmandu - The controversial cleric Dr. Zakir Naik ullanilai down in a crackdown against the country, he has to take up its activities in Nepal