மும்பை - மத்திய அரசின் ஆலோசனைப் படியே பண மதிப்பு நீக்கத்திற்கு பரிந்துரைத்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் ஆயிரம் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. நாடுமுழுவதும் அதிகரித்து வரும் கருப்புப் பண புழகத்திற்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ரிசர்வ் வங்கி தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடுமுழுவதும் பணப் பரிவர்த்தனை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
மத்திய அரசே காரணம் :
இந்த நிலையில், 7 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி, கருப்புப் பண புழக்கம், கள்ள நோட்டு, தீவிரவாதிகள் விவகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யுமாறு, மத்திய அரசு தங்களுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த நாளே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூடி, இதுகுறித்து விவாதித்ததன் அடிப்படையில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவெடுத்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததன் அடிப்படையிலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேசிவந்த நிலையில், ரிசர்வ் வங்கி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Mumbai - the cash value of the decoding according to the advice of the federal government, as suggested by the Reserve Bank said. Last November, the government suddenly announced that 500 thousand banknotes invalid. Nationwide, the operation was carried out against the growing black money was given no explanation. The opposition parties, the operation was carried out based on the idea that the Reserve Bank said the central government.