சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெ., வின் அண்ணன் மகள் தீபா நிருபர்களிடம் கூறினார்.
அரசியல் பிரவேசம்:
இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது: ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்தவர். ஜெ.,வை இழந்ததால், தமிழக மக்கள் தவிக்கின்றனர். தெய்வமாக இருந்து ஜெயலலிதா மக்களை வழிநடத்த வேண்டும். 1971ல் அதிமுகவை உருவாக்கி மக்களாட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவரது மறைவுக்கு அந்த பணியை துவங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற பலனின்றி மறைந்தார் என்பது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அதிர்ச்சியில் மக்கள் மீள்வதற்குள் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
அழைத்ததற்கு நன்றி :
நான் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள விரும்புகின்றனர். நான் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த பெண். இதழியல் படித்து பத்திரிகையாளராக பணியாற்றினேன். எனக்கு குடும்பம் என சில பணிகள் உள்ளது. இருப்பினும், என்மீது நம்பிக்கை வைத்து அழைத்ததற்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இனி வரும் காலங்களில் தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் பணியாற்றுவேன். தமிழகமும், தமிழும் எனது இரு கண்களாக இருக்கும். எனது வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்து ஜெயலலிதாவின் நல்லாசியோடு, அவர்கள் பாதசுவடு வழிநடந்து, மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்.
ஜெ., வின் கனவு :
அதிமுக என்ற ஆலமரத்தின் பசுமை காக்கும் இலைகளாக அதன் உண்மை தொண்டர்கள் உள்ளனர். இன்று முதல் புதிய பயணத்தை துவங்க உள்ளேன். எம்ஜிஆரின் நுாற்றாண்டு பிறந்தநாளின் இன்று வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை துவங்க உள்ளேன். மக்களின் புன்னகையால், வாழ்ந்து வழிகாட்டிய எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய வழியில்மக்களையும், தமிழகத்தையும் வழிநடத்திட உங்களில் ஒருவராக. உங்களில் ஒருவராக உங்களின் அன்பு சகோதரியாக கேட்டு கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்கள், மக்களுக்கான பணிகள் தொடர வேண்டும். ஜெயலலிதாவின் கனவை ஒன்று சேர்ந்து இன்று முதல் தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக்கும் நோக்கத்துடன் நற்பணிகளை மேற்கொள்வேன். எம்.ஜி. ஆர் விட்டு சென்ற நல்லாட்சியை அவர்களின் வாரிசான ஜெ.,வின் நல்லாட்சியை தொடர செய்வதே, அதிமுக தொண்டர்களின் நோக்கமாகும்.
இந்த நேரத்தில் எனது உரிமைகளையும் கடமைகளையும் நிலைநாட்டிட பேராதரவு அளித்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. ஜெ., கனவை நிறைவேற்றும் வகையில் நம் அனைவரின் களப்பணிகள் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . ஜெ., பிறந்த நாளன்று, அரசியலில் ஈடுபடுவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை வெளியிட உள்ளேன். மக்களின் கருத்தையும், தொண்டர்களின் கருத்தையும் சேகரித்து விட்டு உரிய காலகட்டத்தில் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிரவேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக ஏற்க மாட்டேன். ஜெ., சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மக்களிடம் கேட்க வேண்டும். இதற்காக நான் வரவில்லை. இதுவரை யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: Late Chief Minister Jayalalithaa's birthday, the political declaration is a key to the next stage of the journey j., The niece Deepa told reporters.