சென்னை: ''தீபாவுடன் கைகோர்த்து, அ.தி.மு.க.,வை உடைக்க முயற்சிப்பதாக பரவிய தகவல் வதந்தி,'' என, முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
கைகோர்ப்பா?
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தலைமை ஏற்குமாறு, சசிகலாவை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட, முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். பின், போயஸ் கார்டன், கட்சி அலுவலகம் பக்கம், துரைசாமியை பார்க்க முடியவில்லை. சமூக வலைதளங்களில், 'ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபாவுடன் கைகோர்த்து, சைதை துரைசாமி, அ.தி.மு.க.,வை உடைக்க முயற்சி செய்கிறார்' என, நேற்று தகவல்கள் பரவின; அந்த தகவலை, சைதை துரைசாமி மறுத்தார்.
மறுப்பு:
இது குறித்து, அவர் கூறியதாவது: டிச., 31ல், வீட்டு மாடி படிக்கட்டில், தவறி விழுந்து விட்டேன். வலி அதிகம் இருந்ததால், டாக்டர்களை அழைத்து பரிசோதித்ததில், கால் ஜவ்வு கிழிந்து விட்டதாக கூறினர். காலில், கட்டு போட்டு, வீட்டில் முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன். கால் சரியாக இன்னும், சில தினங்களாகும். இதனால், வெளியே செல்லாமல் உள்ளேன். என்னை பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே.இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: '' accompanied by Deepa, Digg, keep trying to break the rumor spread information, '' the former mayor Saidai Duraisamy said.