புதுடில்லி: பெங்களூருவை தொடர்ந்து, புத்தாண்டு தினத்தில் டில்லியிலும் பெண்ணை மானபங்கப் படுத்திய இளைஞர்கள் சிலர், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புத்தாண்டு அன்று டில்லியின் முகர்ஜி நகர் பகுதியில் பைக் ஒன்றில் வந்த இளம் பெண் ஒருவரை, அங்கு வந்த கும்பல் ஒன்று, தடுத்து நிறுத்தி மானபங்க முயற்சி செய்தனர். அவர்கள் குடிபோதையிலும் இருந்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள், போலீசாரையும் கற்கள் வீசி தாக்கினர். இதில் பெண் போலீசார் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்த போலீசாருக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் சொத்துகளை அந்த கும்பல் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர். போலீஸ் ஸ்டேசனையும் சேதப்படுத்தினர்.
தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம், அங்கு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
English summary:
New Delhi, Bangalore, following the New Year's Day Delhi made it some young girl, police, attack.