புதுடில்லி: ‛ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வழி செய்யும் அவசர சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, ஜனாதிபதியிடம் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் முறையிட்டனர்.
தமிழக அரசின் அவசர சட்டம் மத்திய உள்துறை பரிந்துரையின்படி ஜனாதிபதி பிரணாப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று, ஜனாதிபதி மேற்குவங்கம் சென்று இருந்தார். இன்று அவர் டில்லி வந்தார். அவரை அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் இன்று சந்தித்தனர்.
காலம் தாழ்த்தாமல் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். எனவே இன்று மாலைக்குள் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
NEW DELHI: 'Make way for the conduct of jallikattu rushed to approve emergency legislation that the president Digg - MPs appealed.