புதுடில்லி : மக்கள் 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை பயன்படுத்த, இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
'டிஜிட்டல்' பரிவர்த்தனை:
மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்படி, வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பண பரிவர்த்தனைகள், ரொக்கமற்ற 'டிஜிட்டல்' மூலம் மேற்கொள்ளப்படும் போது அவை கணக்கில் கொண்டுவரப்படுவதால், ஊழல் ஒழிக்கப்படும். மத்திய பட்ஜெட் மதிப்பானது ரூ.18 லட்சம் கோடியாக இருக்கும். இதில் சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு ஒதுக்கப்பட்டு, அத்திட்டத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
இளைஞர்களுக்கு அழைப்பு:
அனைவரும் வருமான வரி செலுத்தா
ததே இப்போதைய பிரச்னைக்கு காரணம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு விழிப்புணர்வு கிடைக்கும். இதனால், கறுப்புப் பணம், ஊழல், கள்ள நோட்டுகள் ஆகியவை ஒழிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உருவாகும். 'டிஜிட்டல்' பரிவர்த்தனை என்ற இலக்கை அடைய இளைஞர்கள் முகவர்களாக செயல்பட்டு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI : People 'digital' use of cash transactions, the Union Minister Prakash Javadekar told the youth to create awareness.