திண்டுக்கல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்ககோரி போராட்டம் நடந்தது வருகிறது. இந்த தடையை மீறி நேற்று பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பூம்பாறை மந்தையில் நேற்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி 5 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கிராம இளைஞர்கள் சீறிவந்த காளைகளை பிடித்து உற்சாகமடைந்தனர்.
நத்தம் கோவில்பட்டியில் கைலாசநாதர் கோயில் முன்பு, தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக, சுமார் 20 காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் வாடிவாசல் வந்ததும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். இதேபோல் நத்தம் அருகே சங்கரன்பாறையில் உள்ள பாலமுருகன் கோயில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு விடப்பட்டது. இங்கு 10க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பழநி அருகே சாமிநாதபுரத்தில் தடையை மீறி நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பழநி - உடுமலை சாலையில் நடந்த பந்தயத்தில் 15க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் அணிவகுத்து சென்றன. போலீசார் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம், க.புதுப்பட்டியில் பொதுமக்கள் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். நேற்று காலை காளைகளை அவிழ்த்துவிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இளைஞர்கள் விரட்டிச் சென்றனர். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர். திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் நேற்று, புனித தோமையார் திருவிழாவை முன்னிட்டு செபஸ்தியார் தேவாலயம் முன்பு தற்காலிக வாடிவாசல் அமைத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 40 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க 100 மாடுபிடி வீரர்கள் திரண்டனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி கோயில் திடலில் தடையை மீறி நேற்று மதியம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து 8 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தகவல் அறிந்து கறம்பக்குடி மற்றும் ரகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடுத்தனர்.
சேவல் சண்டை: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த முள்ளாம்பரப்பில் பொதுமக்கள் சார்பில் நேற்று முன்தினம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்றும் சேவல் சண்டைகள் நடைபெற்றது. பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்கள் நடந்ததை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
English summary:
Dindigul: Tamilnadu battle took place in the state has a ban on Jallikattu. This took place despite the ban jallikattu different locations yesterday. Crowds gathered in protest yesterday in Bumba flock. 5 calves were untied continued defiance. Rural youth solidarity brave caught bulls.