சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்த வேண்டாம் என ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டனர்.
காயம்:
ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மதுரை, சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. சேலத்தில் ரயில் மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
அறிவுரை:
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்த வேண்டாம் என ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மின்கம்பங்களில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் செல்வதால், யாரும் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போலீசாரும் இதேபோன்ற கோரிக்கை விடுத்துள்ளனர். மெரினாவில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English summary:
Chennai: Jallikattu fighting in support of the struggle of young people climbed on the train, railway police and asked them not to.