புதுடில்லி: ‛ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி மற்றும் சுதந்திரத்தன்மை பாதிக்க விட மாட்டோம்' என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு, ஊழியர்கள் எழுதிய கடிதத்தில், ‛ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில், மோசமான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் முக்கிய பதவியில் நிதித்துறை அமைச்சக ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தன்னாட்சி பெற்ற ரிசர்வ் வங்கியின் பெயர், சரி செய்ய முடியாத அளவுக்கு கெட்டு போயுள்ளது' எனக்கூறியிருந்தனர்.
இந்த விபரம் வெளியில் தெரிந்ததும், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
இதனையடுத்து இது தொடர்பாக நிதியமைச்சகம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த விளக்கத்தில், தன்னாட்சி மற்றும் சுதந்திரத்தன்மை பெற்ற ரிசர்வ் வங்கியின் பெருமையை நிதியமைச்சகம் மதிக்கிறது. பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், அரசு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனை சட்ட விதிகளின்படி நடந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி மற்றும் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The Reserve Bank's autonomy and independence will not suffer as' the finance ministry said.