நியூயார்க் - அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவுக்காக ஏற்பாடுகள் மும்மூரமாக நடந்து வருகிறது. மேலும், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதிபர் தேர்தலில் வெற்றி:
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இன்று பதிவியேற்பு:
அவர் வாஷிங்டனில் இன்று (20–ந் தேதி) நடக்க உள்ள பிரமாண்ட விழாவில் அந்த நாட்டின் 45-வது அதிபராக பதவி ஏற்கிறார். டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்துகிறார். ஒன்று, முன்னாள் அதிபராக ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது. மற்றொன்று, டிரம்ப் தனது குழந்தைப்பருவத்தில் பயன்படுத்தியது. அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிற விழா, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் கொண்டாடப்படுகிறது.
ஹிலாரி பங்கேற்பு:
பதவி ஏற்பு விழாவை நேரில் காண்பதற்காக வாஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினரும் திரளாக குவிகின்றனர். டிரம்ப் பதவி ஏற்கும் விழாவில் ஹிலாரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், மற்றும் முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் அவரது மனைவி லாராஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் பதவி ஏற்பு விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்கனவே நடத்த தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
New York - Donald Trump is America's 45th president takes office today. Preparations are underway for the inaugural function .Moreover, unprecedented security arrangements have been made.